இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றினைச் சிப்பாய் கலகத்திலிருந்து தொடங்கி விரித்துரைக்கிறது இந்த நூல். திலகர், போஸ், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா என முன்னோடித் தலைவர்களின் வரலாற்றைத் தெரிவித்து விட்டு, காந்தியின் வரலாற்றினைப் பாடுகிறார் கொத்தமங்கலம் சுப்பு. பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்திக்குத் தென்னாப்பிரிக்காவில் கிடைத்த அவமரியாதைகளையும், அவற்றையெல்லாம் அவர் அகிம்சை வழியில் எவ்வாறு வெற்றி கொண்டார் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார். கவிதையில் ஒரு கதை சொல்லப்பட்டிருப்பதால் கடுமையாக இருக்கும் என்று கவலைப்பட வேண்டாம். காதுக்கு இனிய சந்தங்களுடன், நாட்டுப்புறப் பாடல் வடிவத்தில் இந்த நூல் மிகவும் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. பல்லாண்டு கழித்து, மீண்டும் பதிப்பிக்கப்பெற்றுள்ள இந்நூலில் பழமைப் பொலிவும், புதுமை மெருகும் இணைந்திருப்பது சிறப்பு.
Be the first to rate this book.