ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே.
என்ன காரணமாக இருக்கும்? இந்த ஆதாரக் கேள்வியை முன்வைத்து இந்தப் புத்தகத்தை கட்டமைத்திருக்கிறார் என். சொக்கன். காந்தி மீது ஒரு சாரார் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சியின் அடிப்படை என்ன? அந்த வெறுப்பு உணர்ச்சி கோபமாகவும், பின் வெறியாகவும் மாறிய தருணம் எது? கோட்ஸேவின் வருகை, சதித்திட்டங்கள், படுகொலைக்கான திட்டமிடல்கள், படுகொலை என்று பதைபதைக்க வைக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து கண்முன் விரிகின்றன.
வழக்கு தொடர்பான வெவ்வேறு ஆவணங்களின் அடிப்படையில் காந்தி கொலை வழக்கு எவ்வாறு விசாரிக்கப்பட்டது, எப்படிப்பட்டச் சிக்கல்களை எதிர்கொண்டது, எப்படித் தீர்ப்பளிக்கப்பட்டது போன்றவற்றைப் புத்தகத்தின் இன்னொரு பகுதி விவரிக்கிறது.
Be the first to rate this book.