சுனில் கிருஷ்ணன் மொழிபெயர்த்திருக்கும் ஜீன் ஷார்ப்பின் கட்டுரை இன்றைய சூழ்நிலையில் காந்தியின் அரசியல் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் மீதான விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கங்களை அளித்து விவாதிக்கிறது. காந்தியின் மனித நேயம் ஆன்மீகத் தேடல் இவற்றோடு அவர் ஒரு ராஜதந்திரி என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியர்கள் வன்முறைப் போராட்டத்தை முன்னெடுக்க தகுதியற்றவர்கள் என்பதை நிறுவிய கையோடு அகிம்சை கோழைத்தனமானது என்றும் மக்கள் மனதில் ஆங்கிலேயர்கள் ஆழமாக பதியச் செய்ததை காந்தி தனது ஒத்துழையாமை போராட்டங்கள் மூலமாகவே வேரரறுத்தது அவரது மேதமைக்கு சான்று. உப்புச் சத்தியாக்ரஹ ஒத்துழையாமை போராட்டங்களால் ஆங்கிலேயர்களின் பொருளாதாரம் சீர்குலையவில்லை. மாறாக உலகம் முழுதும் நிலவிய பொருளாதார மந்த நிலையே காரணம் போன்ற மார்க்ஸசியர்களின் குற்றச்சாட்டுகளை தகுந்த புள்ளிவிவரங்களுடன் ஜீன் ஷார்ப் மறுப்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to rate this book.