மகிவனியின் கவிதைகள் பேருண்மைகளையோ, தத்துவங்களையோ பேசுவதில்லை. வறுமையை, நோயை, லஞ்சத்தை, ஊழலை எதையும் எதிர்த்தோ இல்லை ஒழிக்கப்போவதாகவோ பாவனை செய்பவை இல்லை. மாறாக தன்னை. தன்னைச் சுற்றி நிகழும் சூழலை, இயங்கும் மனிதர்களை மௌனமாக அவதானிப்பவையாகத் திகழ்கின்றன. ஒரு கனியைப் பறிப்பதற்கு நாம் உச்சிக்கு செல்லவேண்டும். மருத்துவப் பயன்பாட்டுக்கான வேரை அகழ அதன் ஆழத்திற்குச் செல்லவேண்டும். மகவிவனியிடம் மலர் பறிக்க உயரம் ஏறவேண்டும். அவரது கிணற்றில் தாகம் தீர்க்க ஆழம் இறங்கவேண்டும். சொற்களை விதைகளைப்போல வைத்திருக்கிறார் மகிவனி. உங்கள் நிலத்தை காடாக்கிக் கொள்ளுங்கள்.
- கவிஞர் திரு. கரிகாலன்
மகிவனியின் கவிதைகளில் ஏதோ ஒரு துயரம் மெல்லிய மணம் போலக்கவிந்திருக்கிறது. அதே நேரம் சட்டென்று வியக்கவைக்கும் அறிவுக்கூர்மையும் அந்த வரிகளின் துலக்கமாகத் தெரிகிறது. புத்திசாலித்தனமான சொற்களில் உணர்வுப்பூர்வமான உள்ளடக்கம் என்பது தமிழ் கவிதை உலகில் சற்று அரிதான ஒன்றுதான். அதன் காரணமாகவே மகிவனியின் கவிதைகள் கவர்கின்றன.
- எழுத்தாளர் திரு. இரா. முருகவேள்
'யாரோ ஒருவர் என்ற கவிதை ஒரு வேறுபட்ட முறையில் சொல்லப்பட்டிருக்கிறது. குளிர்பானம் ஒருவரின் தாகம், புத்தகம் ஒருவரின் படிப்பு, ஒரு இருக்கை ஒருவரின் ஓய்வு, மசாலா ஒருவரின் பசி. இப்படி தொடர்புள்ள பொருட்களைத் தலைமாற்றிப் போட்டுக் கவிதையை நடத்துகிறவர் இப்படித்தான் யாரோ ஒருவருக்கு சுமையாகவோ, சேவகனாகவோ இருந்துவிடுகிறோம் 'யாரோ ஒருவராகிய நாமும்' என்று முடிக்கிறார். இந்தக் கவிதை சொல்லப்பட்டிருக்கும் புதுமுறைக்காகக் கவிஞரை உச்சிமுகரலாம்.
- எழுத்தாளர் திரு. சி.ந. சந்திரசேகரன்
Be the first to rate this book.