ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை. (594) தளராத ஊக்கம் உடையவர்களிடம் ஆக்கம் இருக்கும் என்கிறது வள்ளுவனின் வரிகள். அதுமட்டுமல்ல... ஆக்கம் அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும் என்கிறார். அப்படி ஊக்கத்தைக் கைவிடாது ஆக்கபூர்வமாக செயல்பட்டவர்கள்தான், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ரெட்பஸ், ஊபர், ஸ்விகி, ஃபிளிப்கார்ட்... போன்ற ஸ்டார்ட்அப்களை உருவாக்கினார்கள். அவர்கள் தாங்கள் எடுத்த முயற்சியில் முன்னேறியவர்கள் மட்டுமல்ல... வெற்றியின் உச்சத்தைத் தொட்ட மேஜிக்காளர்கள். எப்படி என்கிற கேள்வியில்தான் ஒளிந்திருக்கிறது அந்த மேஜிக்.
படிப்படியாய் முன்னேற்றத்தில் வரும் தோல்வி, இலக்கை அடையும்போது தோன்றும் சறுக்கல் இவ்விரண்டும் சந்திக்கும் அந்தப் புள்ளி, மூளையில் ஒளிரும் ஒளிதான் இவர்களை மாத்தி யோசிக்க வைத்திருக்கிறது. இவர்களின் மாற்று யோசனையில் உருவான கண்டுபிடிப்புகள் உலகையே ஆண்டுகொண்டிருக்கின்றன. சட்டென்று உதித்த ஐடியாவை ஆக்கபூர்வ வழியில் செயல்வடிவமாக்கியவைதான், இப்போது உலக மக்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப்கள்.
அவை எப்படி உருவாகின என்பதைப் பற்றி ஆனந்த விகடனில் கார்க்கிபவா எழுதிய தொடர் கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் வந்திருக்கிறது. இனி உள்ளே கேம்கேஞ்சர்ஸின் மேஜிக் ஸ்டார்ட்...
Be the first to rate this book.