எதையும் கேள்வி கேள் என்றார் சாக்ரடீஸ். அதை நடைமுறையில் வெற்றிகரமாகச் செயல் படுத்தியவர் கலீலியோ கலீலி. சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று உலகம் திடமாக நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் வலுவான எதிர்ப்புக்குரலை எழுப்பினார் கலீலியோ.
‘சொல்லும் விஷயம் தவறாக இருந்தால் தயங்காமல் முரண்படு. போராடு. உன் வாதத்தை நியாயமாக எடுத்து வை.’ கலீலியோ கற்றுத் தரும் பாடம் இது.
பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று கலீலியோ முறைப்படி நிரூபித்துக் காட்டியபோதும் அத்தனை சீக்கிரத்தில் உலகம் ஏற்றுக்கொண்டுவிட வில்லை. இதென்ன புதிய கதை என்று கேலி பேசினார்கள். ‘பைபிளுக்கு எதிராக இப்படி ஒரு புரளியா; உன்னை என்ன செய்கிறேன் பார்!’ என்று மிரட்டினார்கள்.
போராட்டங்களை எதிர்கொண்டு வாழ்க்கை யில் வெற்றி பெறுவது எப்படி என்பதை கற்றுத்தரும் மந்திர வரலாறு இது.
Be the first to rate this book.