நிலநடுக்கம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான மிக்கேயேல் ஃப்பெரியே -யின் நேரடி சாட்சியமே இந்நூல்.
ஃபுக்குஷிமாவில் அணுஉலை வெடிப்பு நிகழ்ந்த பின்னர் நடந்தது என்ன என்பதை ‘ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை’ என்ற நூல் மூலம் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஃபிரெஞ்சு நாவலாசிரியரும் பேராசிரியருமான மிக்கேயில் ஃபெரியே. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பணியாற்றிவரும் மிக்கேயில் ஃபெரியே, அணுஉலை வெடிப்பு நிகழ்ந்தபோது தலைநகரில் வாழ்ந்தவர். ஃபுக்குஷிமாவிலிருந்து 239 கி.மீ. தொலைவில் டோக்கியோ இருந்த நிலையிலும் அணுஉலை விபத்தால் அந்த நகரமும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்தால் புரட்டிப் போடப்பட்ட ஜப்பானிய நிலத்தையும் மக்களையும் பற்றிய நேரடி சாட்சியமாகவே ஃபெரியே இந்த நூலை எழுதியுள்ளார்.
Be the first to rate this book.