பாரிஸ் கம்யூன் என்று அழைக்கப்பட்ட பாட்டாளி வர்க்க முதல் ஆட்சி முயற்சி வெற்றி பெற்றது எப்படி? குறுகிய காலத்தில் அது வீழ்ந்தது ஏன்? அந்தப் புரட்சியின் பலம், பலவீனங்கள் எவை? எவை? இப்படி எழும் கேள்விகளுக்கு வர லாற்று பொருள் முதல் வாதம் அடிப் படையில் இந்நூல் ஆழமாக ஆய்வு செய்து விடை காண்கிறது. இந்நூலுக்கு பிரெடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய விரிவான முன்னுரை இந்நூலைப் போலவே வரலாற்று முக்கியத்துவம் உடையது. இந்நூலைப் படிப்பது வெறும் வரலாற்றுப் பாடத்தை படிப்பது போன்றதன்று. பாட்டாளி வர்க்கம் மீண்டும் எழும் என்கிற நம்பிக்கையை அறிவியல் பூர்வமாக விதைக்கிறார் மார்க்ஸ். சோவியத் யூனியன் சிதைந்து 20 ஆண்டுகளுக்குப் பின் – உலகமயம் பேயாட்டம் போடத்து வங்கி 20 ஆண்டுகளுக்குப் பின் உலகம் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ள வும் – மீண்டும் பாட்டாளி வர்க்கத்தை எழுச்சி கொள்ள செய்யவும் இந்நூல் நம் பிக்கை ஊட்டும். ஆழ்ந்து படிக்க வேண் டிய நூல்களில் இதுவும் ஒன்று.
Be the first to rate this book.