20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகின் ஆன்மிகத் துறை, சட்டத் துறை ஆகியவற்றை மறுகட்டமைப்பு செய்த நாயகர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தாம் அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக். இஸ்லாமியச் சட்டத்துறை வல்லுநர், தனித்துவம் மிக்க ஆசிரியர், மிகச் சிறந்த அழைப்பாளர், தலை சிறந்த எழுத்தாளர் என்று முத்திரை பதித்தவர். இஸ்லாமியச் சட்டத்துறையின் தன்னிகரற்ற நூலான ‘ஃபிக்ஹுஸ் ஸுன்னாவை’ எழுதியவர் என்ற முறையில் பெரும் புகழ் பெற்றவர்.
குர்ஆனிலும், ஸுன்னாவிலும் ஆழ்ந்த ஞானமும், அத்துடன் சாதாரண மனிதர்களின் தேவைகளை மிக உன்னிப்பாகக் கவனித்தும் எழுதப்பட்ட ஒரு நூல்தான் ஃபிக்ஹுஸ் ஸுன்னா. அறிஞர்களால் மட்டுமே புரிந்துகொள்ளும் வண்ணம் இருந்த இஸ்லாமியச் சட்டக்கலையை எளிய மக்களும் புரிந்து-கொள்ளும் வண்ணம் மாற்றிய பெருமை இவரையே சாரும். குர்ஆன், ஸுன்னா, இஜ்மா ஆகியவற்றை ஆதாரங்களாய்க் கொண்டு சட்ட விளக்கங்களை விவரிக்க வேண்டும் என்பது மட்டுமே ஆசிரியரின் இலட்சியம். அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் அவர்களின் ஏறக்குறைய 20 ஆண்டு உழைப்பே இந்நூல். உலகின் பல மொழிகளிலும் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியச் சட்டவிளக்கங்களைத் தெரிந்து அதன் வழி நடக்க வேண்டும் என்று உறுதிகொள்ளும் ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும் இந்நூல் ஓர் அருட் கருவூலம்.
Be the first to rate this book.