“எந்த மத்ஹபு குறித்தும் ஆதரவோ எதிர்ப்போ இல்லாமல், நபிவழியை அடிப்படையாகக் கொண்டு சட்ட விளக்கங்களைத் தருதல் எனும் மகத்தான சாதனையை ஃபிக்ஹுஸ் ஸுன்னா நூல் சாதித்துக் காட்டியிருக்கிறது” எனும் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவியின் ஒரு வரி போதும், இந்த நூலின் சிறப்பைச் சொல்ல!
ஃபிக்ஹுஸ் ஸுன்னா - தூய்மை, தொழுகை, ஜகாத் - நோன்பு - இஃதிகாஃப், ஜனாஸா, திக்ர், துஆ, பயணம், ஹஜ், உம்ரா, திருமணம், மணவிலக்கு, குற்றவியல் தண்டனைகள், ஜிஹாத் - சத்தியங்கள் - நேர்ச்சை என இதுவரை ஒன்பது தொகுதிகள் வெளிவந்தன.
தற்பொழுது பத்தாம் தொகுதியில் வாழ்வாதாரத்தைத் தேடும் வணிகத்தைப் பற்றிய விரிவான தகவல்களும் வட்டி, வாடகை, ஹவாலா, இரவல், வழியில் கண்டெடுத்த பொருள்கள் என முக்கியமான தலைப்புகளில் முழுமையான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.