'The 400 Blows', 'Shoot the Piano Player' போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரெஞ்சு புதிய அலை இயக்குனர் த்ரூபாவின் 'Fahrenheit 451' திரைப்படத்தின் மூல வடிவமாக அமைந்த நாவல்.
“புத்தகங்களைத் தடைசெய்யும் நாட்டில்... மதங்களின் குறைகளைக் காட்டும் புத்தகங்களைத் தடை செய்யும் இன்றைய அரசியல் சூழ்நிலையில், சாதிகளைப் பற்றி எழுப்பட்டிருக்கும் கட்டுமானங்களைக் கேலிசெய்யும் திரைப்படங்களை முடக்கும் இன்றைய சமூகச் சூழ்நிலையில், புத்தகங்களையும் படங்களையும் எரிக்க வேண்டும் என்னும் ஒரு ஆணை சரியானதாகவே தோன்றும். புதுமைப்பித்தனின் சில கதைகளை மாணவர்களிடமிருந்து மறைப்பது நியாமாகத் தோன்றும். இந்த மாதிரியான சமாதானங்கள் சமூகத்தை எங்கு கொண்டுபோய் விடும் என்பதை இந்த நாவல் சுட்டுகிறது. அரசின் தடைக்கு-உருவமாக-, எரிப்புக்கு-சமூகத்தின் பகுதியனர் தங்களுக்கு விருப்பம் இல்லாத எழுத்துகள் தங்கள் உணர்வுகளைக் காயப்படுத்துகின்றன என்று கொதிப்பது ஒரு காரணம் என்று... நாவலில் ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது. இந்தியர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு யதார்த்தம் இது.”
Be the first to rate this book.