இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்?
இனம், நிறம், மொழி, தேசம் அனைத்தையும் கடந்த பிரமாண்டமான சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். உண்மையில், தனியொரு உலகம் அது. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை, நண்பர்கள் முதல் காதலர்கள் வரை, தொழில் முனைவோர் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் இன்று ஃபேஸ்புக் மூலமாகத் தான் உரையாடிக்-கொள்கிறார்கள், செய்தி பரிமாற்றம் செய்துகொள்கிறார்கள்.
பொழுதுபோக்குவதற்கான அரட்டைக் களம் என்னும் அடையாளத்தை ஃபேஸ்புக் எப்போதோ கடந்துவிட்டது. சமீபத்தில் நடைபெற்ற அரபுலக மக்கள் எழுச்சியை ஒன்றிணைத்ததில் ஃபேஸ்புக் வகித்த பாத்திரம், முக்கியமானது. இந்தப் புத்தகம், ஃபேஸ்புக்கின் பிரமிப்பூட்டும் வெற்றிக் கதையை அதன் தொடக்கக் காலத்தில் இருந்து விவரிக்கிறது.
Be the first to rate this book.