நீண்ட காலத்திற்குப் பிறகு நாவல் என்ற வடிவம் பற்றி நான் உருவாக்கிய ஒரு விவாதம் தமிழில் நிகழ்ந்தது 1991-ல். அது தமிழ் நாவலின் வடிவை மாற்றியமைத்தது. தமிழில் முழுமைப் பார்வையும், தொகுப்புத்தன்மையும், மையத்தரிசனமும் அல்லது எதிர்த் தரிசனமும் கொண்ட பெருநாவல் உருவாக வழிவகுத்தது. அதை அதற்குப் பின் வந்த நாவல்கள் அனைத்தையும் பார்ப்பவர்கள் உணர முடியும். அத்தகைய தொடர் விவாதங்கள் ஒரு சூழலில் நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்.
க.நா.சு அல்லது சுந்தர ராமசாமி ஒரு படைப்பை விவாதிக்கையில் சரியாக மொழியும் வடிவமும் கொண்டு வந்துள்ளது என்பதையே சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் அந்த மொழி எப்படி இருக்க வேண்டும் அந்த வடிவம் என்ன என்பதைப் பற்றிய விவாதங்களுக்குள் வருவதைத் தவிர்க்கிறார்கள்.
இந்த நூல் அந்த வடிவம் பற்றிய ஒரு விவாதத்தை முன்வைக்கிறது. மீறக்கூடாத இலக்கணமாக அல்ல, குறைந்தபட்ச எதிர்ப்பார்ப்பாகவும் சாத்தியமாகவும் மீறப்பட வேண்டிய எல்லையாகவும். இன்று எழுத வரும் வாசகர்களுக்கு இந்த நூல் உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இதை அவர்கள் ஒரு அறைகூவலாகக் கொள்ளலாம். இதிலிருந்து முன் செல்லும் கனவை தீட்டிக்கொள்ளலாம்.
Be the first to rate this book.