நாற்பதாண்டு காலமாக சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர் சா.கந்தசாமி. இவரின் முதல் நாவல் ‘சாயாவனம்’. சுற்றுப்புறச் சூழல் பற்றி அதிகம் அறியப்படாத ஒரு காலகட்டத்தில், இயற்கையின் வளம் பற்றி மிகநுட்பமான தொனியில் எழுதப்பட்ட நாவல். அது 1965ஆம் ஆண்டில் எழுதப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து நூலாக வெளிவந்தது. இன்றும் இந்திய நாவல்களில் மிகமுக்கியமான நாவலாக இருக்கிறது. அவன் ஆனது, சூரியவம்சம், தொலைந்து போனவர்கள், விசாரணைக் கமிஷன், கருப்பின் குரல், மாயாலோகம் என்பன பிற நாவல்கள். ‘விசாரணைக் கமிஷன்’ 1998ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1940ஆம் ஆண்டில் மயிலாடுதுறையில் பிறந்தவர். சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
Be the first to rate this book.