இந்த நாவல் ஒர் எழுத்தாளன் பற்றியதுதான். அவன் எங்கே, எப்படி ஏன் எழுத்தாளனானான் என்ற உளவியல் காரணங்களை இங்கே அடுக்கவில்லை. நான் சந்தித்த, கேள்விப்பட்ட, அனுபவித்த எழுத்து வாழ்க்கை இதை எழுத வைத்தது. சகாதேவன் ஒரு கற்பனை கதாபாத்திரம். அவனுடன் வரும் மனிதர்களும் அவ்வாறே. அவர்களை நீங்கள் எங்கேயாவது நிஜமாக சந்திக்க நேர்ந்தால் மகிழ்வேன். எழுத்தாளன் எல்லாவற்றையும் புனைவாக மட்டுமே அனுமதிக்க முடியாதுதானே. சிரித்தபடி என்னைக் கடந்த பல மனிதர்களின் நிஜ முகங்கள் எனக்கு பேரதிர்ச்சி தந்துள்ளன. சட்சட்டென்று நிறம் மாறும் உலகம் எனக்கு மிகுந்த அயர்ச்சியைத் தந்திருக்கிறது. நிறம் மாறுதல் மட்டுமே இங்கே நிஜம் என்ற உண்மை புரிந்து எழுதிய நாவல் இது.
- கணேசகுமாரன்
Be the first to rate this book.