நாட்டார் தெய்வக் கதைகள் ஈர்ப்புடையவை. எல்லோரையும் ஈர்க்கக் கூடியவை. இன்று வரை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் சனங்களின் சாமிகள் தொடர்பான திரைப்படங்களும் தொலைக்காட்சி தொடர்களுமே இதற்கு தக்க சாட்சிகள். சாமிகளின் தோற்றக் கதைகள் சுவாரசியம் மிகுந்தவை. சாமிகளின் மீதான சனங்களின் நம்பிக்கைகளும், சாமிகள் தொடர்பாக மக்கள் கொண்டிருக்கும் வழக்காறுகளும் அதற்க்கிணையான சுவாரசியம் கொண்டவை. தமிழ் எழுத்தாளர்கள் இத்தகைய சுவாரசியங்களைத் தங்களது சிறுகதைகளில் எப்படிக் கையாண்டார்கள் என்பதை எடுத்தியம்புவதே இந்த தொகை நூல்.
நாட்டார் தெய்வங்களை பற்றிய, நாட்டார் தெய்வங்கள் முக்கிய கதாபாத்திரங்களாகத் தோன்றும் 20 தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு இது.
Be the first to rate this book.