எழுதும் கலை குறித்து சில நூல்கள் தமிழில் ஏற்கனவே வந்துள்ளன. ஆனால் எழுத்து வாழ்வின் தத்துவம் குறித்த முதல் தமிழ் நூல் இதுவே. தமிழில் எழுத வரும் ஒரு படைப்பாளி தன் இலக்கு, வாழ்வுமுறை, தத்துவம், எதிர்பார்ப்புகளை எப்படி உருவாக்கிக் கொள்வதென இந்நூல் விளக்குகிறது. எழுத்தைக் கொண்டு எப்படி சம்பாதிப்பது, வெற்றியடைவது என்று அல்லாமல் எழுத்து எப்படி ஒரு சிறந்த வாழ்வின் பகுதியாக இருக்க முடியும் எனப் பேசுகிறது. எழுத்தாளன் எதை வாசிப்பது, அவனுக்கான தத்துவம், அரசியல் என்ன, வரலாற்றில் அவன் இடம் என்ன என விவாதிக்கிறது. அதே சமயம் இது எழுத்தாளனுக்கான வாழ்தல் முறை கையேடு மட்டுமல்ல; தமிழில் ஒரு எழுத்தாளனின் பண்பாட்டு வரலாற்று இடம், அவனுடைய உளவியல், நுண்ணுணர்வு, தமிழ் இலக்கிய சூழல், அதிலுள்ள சிக்கல்கள் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கான நூலும்தான் இது. அவ்விதத்தில் ஒரு எழுத்தாளனின் அகத்துக்குள் நெருங்கிப்போக விரும்பும் வாசகர்களுக்கும் இந்நூல் பயனளிக்கும்.
Be the first to rate this book.