தலைவர் கலைஞரின் இறுதி நாட்கள் குறித்து எழுதிய சில கவிதைகளின் குறுந்தொகுப்பு இது....
தலைவரின் இறுதி ஊர்வலத்தின்போது பல தொலைகாட்சிகளில் இலட்சோப இலட்சம் மக்கள் இக்கவிதைகளை கண்ணீருடன் கேட்டார்கள்... அடுத்து வந்த நாட்களில் நான் செல்லுமிடமெல்லாம் மனம் பதைக்க என்னை அணைத்துக்கொண்டு இக்கவிதைகள் பற்றி என்னிடம் உரையாடியவர்கள் ஏராளம்...
நான் ஒரு மனிதரை எவ்வளவு நேசிக்க முடியும் என்பதை நானே கண்டுபிடித்த தருணங்கள் இவை...காவேரி மருத்துவமனை வாசலில் பித்தனைப்போல நின்றிருந்த நாட்களின் கொடுங்கனவுகள் இவை
தலைவரைப் பற்றி இதைவிட சிறந்த வரிகளை எவரும் எழுதிவிட இயலாது என்பதை பணிவுடன் கூற விரும்புகிறேன்.
தலைவர் இல்லை என்பதை ஏனோ இன்று அவ்வளவு வெறுமையுடன் உணர்கிறேன்.
- மனுஷ்ய புத்திரன்
Be the first to rate this book.