திருக்குர்ஆனுடன் ஓரளவு தூரம் பயணித்து, அது தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்தவர்களுக்கு எடுத்துக் கூறும் பணி மிகப் பெரும் அருள். புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. அதேநேரம், அது மிகப் பொறுப்புமிக்கதொரு பணியும் கூட.
90களுக்குப் பிந்தைய தமிழக இஸ்லாமிய வரலாற்றில்- கலாச்சாரத்தில் - வாழ்க்கையில் இஸ்லாமிய இயக்கங்களின் வரவு மிக முக்கியமானது. தாய் சபையான முஸ்லிம் லீக் தன் இருப்பை தக்க வைத்துக்கொள்ள தவறியதின் விளைவாகவே அது தேக்கமடைந்தது. மேலும் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நிகழ்வு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற ஒரு அச்சத்தை நாடு முழுக்கவும் ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தமிழகத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் கொந்தளிப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து இயக்கங்களின் வரவும் அதன் பிறகான குழப்பங்களும் தமிழ் நாட்டில் இஸ்லாமியர்களிடையே பெரும் பிரச்சனையானது. அதைப் பற்றி பேசும் ஒரு சிறு அலசலே இந்த '73வது கூட்டத்தினர்' நாவல்.
'சுவர்க்கம் போகும் கூட்டம் எது?' இந்த நாவலின் மையப்புள்ளி இதுதான். இதற்காகத்தான் இவ்வளவு குழப்பங்களும்- பிரச்சனைகளும்!
இஸ்லாத்தின் பெயரால் தமிழகத்தில் நிலவும் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனைகளையும் - குழப்பங்களையும் இதனால் முஸ்லிம்களின் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்பது குறித்து தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யும் நோக்கத்தில் எழுதப்பட்டதே 'எழுபத்தி மூன்றாவது கூட்டத்தினர்' என்கிற இந்த நாவல்.
Be the first to rate this book.