எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வெளிவந்து இருபதாண்டுகள் ஆகிறது. இப்போதும் இந்த நாவல் கொண்டாடப்படுவதாகவும் சகித்துக் கொள்ளமுடியாததாகவும் இருப்பதற்கு காரணம் தமிழ்ப் புனைகதை மொழியை அது சிதறடித்து ஒரு புதிய கதை சொல்லல் முறையை உருவாக்கியது தான். அந்த வகையில் தமிழில் பின் நவீனத்துவ நோக்கில் எழுதப்பட்ட முதல் நாவலாக இதையே குறிப்பிட இயலும். மனித உடல் மற்றும் மனதின் மீது நமது கலாச்சார வாழ்க்கை செலுத்தும் வன்முறைக்கு எதிராக, இலக்கியத்தில் அது உருவாக்கும் ஒழுக்கவியல் சார்ந்த அழகியலுக்கு எதிராக இந்த நாவல் ஒரு மாற்று மொழியையும் புனைவு வெளியையும் படைக்கிறது.
Be the first to rate this book.