எதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலமாகக் கனவு கண்டால் எப்படி இருக்கும்? மாதச் சம்பளம். வருடாந்திர சம்பள உயர்வு. சொந்த வீடு. ஒரு கார். இவை சராசரிக் கனவுகள். அட்டகாசமாக ஒரு பிசினஸ் பிளான். செயல்படுத்த சொந்தமாக ஒரு நிறுவனம். சொல்வதைச் செய்து முடிக்க ஒரு டீம். புதிய ஐடியாக்களை முனைப்புடன் முயன்று பார்க்கவேண்டும். புதிய வாசல்களைத் திறக்கவேண்டும். மேலே, இன்னும் மேலே என்று வளரவேண்டும். நான். என் நிறுவனம். என் குடும்பம். என் டீம். என் சமூகம்.
ரிஸ்க்கான கனவுதான். சந்தேகம் இல்லை. ஆனால் சாதித்து முடித்துவிட்டால், உங்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ஆட்டத்துக்கு நீங்கள் தயாரா? முதலீடு, பின்னணி எது பற்றியும் கவலைப்படவேண்டாம். குவியும் போட்டியாளர்கள் குறித்து அச்சம் கொள்ளவேண்டாம். எந்தத் துறை, எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று குழம்பித்தவிக்கவேண்டாம். அடிப்படையில் இருந்து தொடங்கி படிப்படியாக, ஒரு பிசினஸ் பிளானை உங்களுக்காக வடிவமைத்துக்கொடுக்கிறது இந்நூல். வெற்றிகரமான ஒரு தொழிலதிபராக உங்களை உருமாற்றுவதற்குத் தேவைப்படும் அத்தனை வழிமுறைகளையும் உள்ளடக்கிய ப்ளூப்ரிண்ட் இது.
உன்னதமானவற்றை மட்டுமே நாம் முயற்சி செய்வதன் மூலம் குறைந்தபட்சம் நல்லவற்றையாவது நம்மால் பெற அல்லது தரமுடியும். ஒரு "சுமார்" சரக்கை நாம் உத்தேசிக்கும்போது நிச்சயம் மோசமான ஒன்றைத்தான் நம்மால் உற்பத்தி செய்ய முடியும். எனவே உன்னதங்களை நேசிப்போம். உன்னதங்களைக் கனவு காண்போம். அந்த உயர்ந்த நிலையை அடைவதற்கான வழிகளை நமக்கு நாமே உருவாக்குவோம். நம்புங்கள். இது முடியாததல்ல. எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. எதிலும் உன்னதம் என்கிற மகத்தான நிலையை அடைவதற்கு இந்தப் பயிற்சி உங்களைத் தயார்படுத்தும்.
வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் மிகச் சிறந்த நிலையை, மிகப்பெரிய வெற்றியை, மிக உன்னதமான புகழை, பெயரை, கௌரவத்தை, பெருமையை, நிரந்தரமான நல்லதொரு தடத்தைப் பதிப் பதற்கான வழிகளை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. சரியான விளைவுகளுக்கான வழிகளைச் சொல்லுவதல்ல இதன் நோக்கம். சிறப்பான விளைவுகளைத் தருவது மட்டுமே குறி.
Be the first to rate this book.