'எனக்குப் பிறகு இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டியது சம்பத் தான் என்று மனதுக்குள் திட்டமிட்டுவைத்திருந்தேன்’ என்றார் பெரியார். 'நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டிய முதலமைச்சர் நாற்காலி இது. நான் உட்கார்ந்து இருக்கிறேன்’ என்றார் எம்.ஜி.ஆர். ஆனால், 'சொல்லின் செல்வர்’ என்ற பட்டத்தோடு மட்டுமே தன்னுடைய அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொண்டார் ஈ.வெ.கி.சம்பத்.
அவரைப் போல எவராலும் பேச முடியாது. அண்ணாவே பல நேரங்களில் அவரது பேச்சில் மயங்கியவர். சம்பத்தின் எழுத்தைக் கேட்டுக் கேட்டு வாங்கி தன்னுடைய இதழ்களில் கண்ணதாசன் வெளியிட்டு மகிழ்ந்தார். உள்ளூர் அரசியலையும் உலக அரசியலையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மணிக்கணக்காய் விவாதிக்கும் திறமை சம்பத்துக்கு இருந்தது. ஆனாலும் அவரால் அரசியலில் கோலோச்ச முடியவில்லை. ஏன்? அதற்காகவே இந்தப் புத்தகம்!
Be the first to rate this book.