ஈழம்... பேசிப்பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப் படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமிழ் தேசியம் சார்ந்த ஆதரவு தளத்தில் இயங்கியவர்கள். புலிகள் இயக்கத்துடன் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள். பழ.ரிச்சர்ட், இடதுசாரியாக அறியப்பட்டவர். ஜனதா விமுக்தி பெரமுனாவிலும் இருந்தவர். பெண்ணுரிமை மற்றும் இஸ்லாமியர் நலன் சார்ந்து பேசக்கூடியவர் ஸர்மிளா ஸெய்யித். 'உம்மத்’ நாவலை எழுதியவர் இவர். இவர்கள் அளித்த பேட்டிகள் பற்றிய தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார் கவிஞர் நிலாந்தன். இந்த அடிப்படையில் ஈழப் பிரச்னையை ஆறு பேர் பார்வையில் பார்க்க அடித்தளமாக அமைந்துள்ளது இந்தத் தொகுப்பு.
Be the first to rate this book.