ஒ வ்வொ ரு க தை யும் ஒவ்வொரு விதமாக வண்ணவண்ணபலூன்களைச் சேர்த்துக் கட்டியது போல வாசகர்களை ஈர்க்கும் விதத்தில் எழுதப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. எந்த ஒரு கதையிலும் இன்னொரு கதையின் எந்தச் சாயலுமில்லையென்பது சாதாரண விஷயமில்லை.
மனிதர்களின் கனவைப் போலவே விலங்குகளும் கனவு காணும் பாக்கியலட்சுமியின் கனவாகட்டும், சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்குப் பிழைப்புக்காகப் போய்ச்சேரும் குடும்பத்திலுள்ள பாப்பு தன்னுடைய தனிமையில் வானத்திலேயே தனக்குப் பிரியமான எல்லாவற்றையும் காண்கிற பாப்பு வானத்தில் கண்ட காட்சியாகட்டும், மரங்கொத்தியும் ஆந்தையும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிற மூக்கழகி மரங்கொத்தியும் கண்ணழகி ஆந்தையும் கதையாகட்டும், காட்டு மரங்களை வெட்டித்தள்ளுகிற மனிதர்களை விரட்ட புலியின் உதவியை நாடுகிற பட்டுவும் சிட்டுவும் கதையாகட்டும், அபூர்வக்குளத்தில் பார்க்கிற கொக்குகள் பூத்திருக்கிற கொக்கு மரம் கதையாகட்டும், கூண்டுகளில் சிறைப்பட்ட விலங்குகள் தங்களுடைய சொந்த வாழ்விடத்துக்குத் தப்பித்துச் செல்கிற தப்பிக்குமா தங்க மீன் கதையாகட்டும், நாயின் நன்றியைச் சொல்கிற அன்புக்கு மேல என்ன இருக்கு கதையாகட்டும், கதைகளில் ராஜாவாகவே சொல்லப்படுகிற சிங்கம் புலம்புகிற புலம்பத்தில் நமக்கு பல வெளிச்சம் கிடைக்கிற எவஞ்சொன்னது ராஜான்னு கதையாகட்டும், எதிர்காலத்தில் பறவைக் காதலனாக மாறவேண்டுமென்று ஆசைப்படுகிற பறவைக் காதலன் கதையாகட்டும், நவீன கேட்ஜெட்டுகளின் பிடியில் மாட்டிக்கொண்ட குழந்தைகளிடம் உரிமையோடு கோபப்படுகிற மரப்பாச்சியின் கோபம் கதையாகட்டும், சாதாரணப் பொருட்களின் மீது அசாதாரணமான மூடநம்பிக்கைகளை ஏற்றிப் பின்பற்றுபவர்களை அந்தப் பொருட்களே சாடுகிற வழக்கு எண் 005 கதையாகட்டும், எல்லாக் கதைகளும் ஒரு புதிய காற்றை சுவாசிப்பதைப் போல புத்துணர்வூட்டுகின்றன.
Be the first to rate this book.