சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய முடியும்? உங்கள் கையில் அரசின் அதிகாரம் இருந்தால்... எதையும் சாதிக்க முடியும். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், எளியோருக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். ஆம்! இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணிதான் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நிர்வாகத் திறமையால் நற்பணிகள் செய்யும் திறன்வாய்ந்தது ஐ.ஏ.எஸ். பணி. நம் நாட்டின் எதிர்காலத் தேவை நல்ல நிர்வாகிகள். நம் அரசின் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய திறன் உங்களிடத்திலும் இருக்கலாம். ஆனால், ‘ஐ.ஏ.எஸ்., தேர்வு கடினம். தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு’ என்றெல்லாம் பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ‘தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது எப்படி? ஒவ்வொரு தேர்வையும் எப்படி எழுத வேண்டும்? எளிதாக எப்படி விடையளிக்கலாம்?’ போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் இந்த நூலாசிரியரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான விஜயகார்த்திகேயன். அற்புத டிப்ஸ்களையும் அள்ளி வழங்கி இருக்கிறார். தன்னுடைய தேர்வு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் அற்புதமான நடையில் வடித்துத் தந்துள்ளார். இந்திய ஆட்சிப் பணிக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளத் துணிந்தவர்களுக்கு, சாதிக்க துடிப்பவர்களுக்கு சத்துள்ள நம்பிக்கை டானிக் இந்த புத்தகம். படியுங்கள்... அதிகாரத்தை எட்டிப் பிடியுங்கள்.
Be the first to rate this book.