நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை உருவாக்கித் தரவேண்டியதும் பள்ளியின் கடமைதான். நான் அடிக்கடி மேற்கோளிடும் ஒன்றை இங்கும் பதிவது அவசியம் என்று படுகிறது.
யுனெஸ்கோவின் ஓர் அறிக்கை ‘the purpose of education is to include the excluded’ என்று சொல்கிறது. ‘கல்வி மறுக்கப்பட்ட ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டு வருவதே கல்வியின் நோக்கம்’
- நூலிலிருந்து
Be the first to rate this book.