தனி மனித வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பும் வரலாறுதான். புள்ளிவிவரங்களைச் சொல்லி, வாசிப்பதற்குக் கடினமான வார்த்தைகளைத் திணிக்காமல், நேர்த்தியான நடையில் எழுதப்பட்ட எத்தனையோ வரலாற்று நூல்கள் மக்களுக்கு உபயோகமாக அமைந்துள்ளன. கலை, இலக்கியம், அரசியல் போன்ற பல்வேறு களங்களில் புகழ்பெற்று விளங்கும் மேதைகளின் அனுபவங்களைத் தொகுத்து எழுத தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி. இதை எழுதக்கூடிய அனுபவம் மட்டுமல்லாமல், தகுதியும் மிக்கவர். தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட வ.உ.சி. முதல் அறியப்பட வேண்டிய அப்துற் ரஹீம் வரை பலருடைய வாழ்க்கைச் சம்பவங்களைத் தொகுத்துக் கண்ணாடிபோல பிரதிபலித்திருக்கிறார். அந்த அபூர்வ மனிதர்களின் குணநலன்களைப் பெருமைப்படுத்துவதாக இருப்பதுடன் அவர்களுடைய அனுபவங்களைப் படித்து அறியும் வாசகர்கள், தங்களை மேலும் செழுமைப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த நூல் அமையும் என நம்புகிறேன்.
Be the first to rate this book.