கனவையும் கவிதையையும் தனித் தனியாகக் கைவசப்படுத்தவும், கலந்து கட்டியாகக் கொடுத்து வேடிக்கை பார்த்து சிரிக்கவும் இரவுக்குத்தான் முடியும். அது ஒரு முழுப் போக்கிரி. போக்கிரிகள் சுருட்டு குடிப்பார்கள். நல்லவர்கள் அந்த வாடையை அனுபவிப்பார்கள். எனக்கு சுருட்டும் பிடிக்கும். ராத்திரியும் பிடிக்கும். போக்கிரிகளையும். நானே போக்கிரிதான். கவிதை எழுதறேனே. மின்சாரம் போன இன்னொரு ராத்திரி. துருவப் பிரதேசக் குளிர் காலத்தில் சூரியன் முகத்தைக் காட்டாத இருட்டில், இரவில் மூழ்கித் துயிலும் ஒரு நாளிலிருந்து அடுத்த நாளும் இரவாகவே விடிவது போல், கவிதை ராத்திரி கதை ராத்திரியில் தொடர்கிறது. ராத்திரிகள் பூடகமானவை. தர்க்கத்துக்கு உட்படாதவை. அவற்றின் மர்மப் புன்னகை என்னைக் காதலிக்கச் சொல்கிறது. காமம் செப்பச் சொல்கிறது.
Be the first to rate this book.