“எதிர்ப்பரசியல்” எனும் தலைப்பில் வெளியாகும் கட்டுரைத் தொகுப்பில் பெரும்பாலான கட்டுரைகள் வெளியான தருணத்திலேயே படித்தவன் என்கிற முறையில் இத்தொகுப்பின் முக்கியத்துவம் குறித்து துளியும் சந்தேகம் இல்லை. கோவிட் தொற்று முதல், உக்ரைன் X ரஷ்யா போர், ஆஃப்கனிஸ்தான்; ஈரான்; சிரியா;குர்திஸ்தான்; மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்கள்,இலங்கையின் பொருளாதார மந்த நிலை, அரசியல் மாற்றம், ஐரோப்பிய மற்றும் அமெரிக்கநாடுகளில் கோவிட் தொற்று காலத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள், பொருளாதாரப் பின்னடைவுகள் ஆகிய நிகழ்வுகளோடு கோவிட் தொற்று ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்து இன்று வரையிலான உலக அளவிலான முக்கிய நிகழ்வுகளை அதன் அரசியல் பின்னணியை, பொருளாதார அடிப்படையை ஒரு நேர்மை மிக்க பொறுப்புள்ள பத்திரிக்கையாளராக தன் பணியை செய்திருக்கிறார்.
- ஜீவ கரிகாலன்
Be the first to rate this book.