நெருக்கடி நிலைக்காலத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்ட நொடியில். மிசா சட்டத்தின்கீழ் கழகத்தினர் பலரும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டனர். மூத்த நிர்வாகிகள் முதல் இளைஞர்கள் வரை எல்லா வயதினரையும் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை. கல்லூரி மாணவராக இருந்த சிவாவும் போலீசாரால் தேடிக் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் கழகத்தின் மூத்த நிர்வாகிகளுடன் அடைக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ். கனவுடன் இருந்த அவரது வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம், எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது. பொதுவாழ்வுக்கு முன்வருபவர்கள் எதிர்கொள்ளும் சிறைவாழ்வு எப்படிப்பட்டது என்பதை இரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார் அன்றைய மிசா சிவா, இன்றைய திருச்சி சிவா எம்.பி.
மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்
1971ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் களப் பணியாளராக அடியெடுத்து வைத்து — இன்று தி.மு.க. மாநிலங்களவைக் குழுத் தலைவராக பரிணமிக்கிறார். இந்த நூல் பற்றி அணிந்துரை எழுதிட எனக்குள்ள தகுதி நானும் ஒரு மிசா கைதி என்பது தான்! தோழர் சிவா அவர்கள் ஓராண்டுக் காலம் திருச்சி மத்திய சிறைச்சாலையில் கைதியாக இருந்த காலகட்டம் என்பது -அவர் வாழ்வைக் கூர் தீட்டிய கொல்லுப்பட்டறை என்பதை இந்நூலில் அவர் குறிப்பிடும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் குத்தீட்டியாக சிலிர்க்கிறது.
கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
“எதிர்பாராத திருப்பம்” எனும் இந்நூல் நெருக்கடி காலத்தில் கழகமும் – கழகத் தோழர்களும் சந்தித்த சோதனைகளையும், வேதனைகளையும் இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து புரிந்து கொள்ளுகின்ற வகையில் எளிமையான நடையுடன் அமைந்துள்ளது. நெருக்கடி காலத்தில் மிசா சட்டம் அமல்படுத்தப்பட்டபோது. சிறையில் கழகத்தினர் பட்ட இன்னல்கள். சந்தித்த சோதனைகள், இடையூறுகள், கவலைகள் ஒவ்வொன்றையும் இந்நூலில் எடுத்துரைக்கின்ற விதம், நெருக்கடி காலத்தில் சிறையில் இருந்த எங்களைப் போன்றவர்களுக்கு, ‘மலரும் நினைவுகளாய் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆர். எஸ். பாரதி அமைப்புச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
Be the first to rate this book.