நெருக்கடி நிலைக் காலத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்ட நொடியில் மிசா சட்டத்தின் கீழ் கழகத்தினர் பலரும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டனர். மூத்த நிர்வாகிகள் முதல் இளைஞர்கள் வரை எல்லா வயதினரையும் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை. கல்லூரி மாணவராக இருந்த சிவாவும் போலீசாரால் தேடிக் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் கழகத்தின் மூத்த நிர்வாகிகளுடன் அடைக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ். கனவுடன் இருந்த அவரது வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம், எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது, பொதுவாழ்வுக்கு முன்வருபவர்கள் எதிர்கொள்ளும் சிறைவாழ்வு எப்படிப்பட்டது என்பதை இரத்தமும் சதையுமாக எழுதியிருக்கிறார் அன்றைய, ’மிசா’ சிவா, இன்றைய திருச்சி சிவா எம்.பி.
- மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்
Be the first to rate this book.