பத்து வருடங்கள் சமூகத்தை தொடர்ந்து கவனித்து வரும் ஒரு பத்திரிகையாளரின் கவனிக்கத்தகுந்த கட்டுரைகள் இவை. யாவும் வணிகமாகிவிட்ட நடப்பு உலகமய உலகில், பரபரப்புக்காக அல்லாமல் மக்களின்பால் கரிசனம் கோரும் இவ்வெழுத்துக்கள்தான் உடனடி தேவையும் கூட. பொதுப்புத்திக்கு எதிரே நின்று தர்க்கம் புரிவதை ஒட்டுமொத்த கட்டுரைகளின் சாரமாகக் கொள்ளலாம்.
ஆனந்த விகடன், குமுதம் போன்ற வெகுஜன ஊடகங்களில் இயங்கிவரும் பாரதி தம்பியின் இந்தக் கட்டுரைகள் வெகுஜன இதழ்களுக்கே உரிய மேம்போக்குத் தன்மையில் இருந்து விலகியிருப்பதும், உண்மையை உள்ளடக்கமாய் கொண்டிருப்பதும் முக்கியமானது!
Be the first to rate this book.