சோவின் பேச்சில், நடிப்பில், எழுத்தில் அங்கதச்சுவை இழையோடிக்கொண்டே இருக்கும். அதனால் நாடகத்தில் திரையில் பத்திரிகை உலகில் தனித்துவமாகத் தென்பட்டவர். மற்றவர்களையும் கிண்டல் செய்தவாறு தன்னையும் கேலிசெய்துகொள்வார். சமூக நாடகங்கள் திரைப்பட வசனங்கள் எழுதியிருக்கும் சோ, இராமாயணம், மகாபாரதம் குறித்தெல்லாம் தமது துக்ளக்கிலேயே தொடராக எழுதியிருப்பவர். தானும் அவ்வாறு தொடர்கள் எழுதியதுடன் மற்றவர்களையும் துக்ளக்கில் அவரவர் துறைகளில் எழுதத்தூண்டியவர். ஜெயலலிதா, ஜெயகாந்தன் உட்பட பலர் துக்ளக்கில் எழுதியிருக்கிறார்கள்.
Be the first to rate this book.