எல்லோரும் பக்குவப்பட்ட மனநிலையில் இருந்துகொண்டு இன ஒதுக்கல் கோட்பாடு பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருக்க மாட்டார்கள். வழிதவறிப் போகின்றவர்களும் உண்டு. அது வன்முறை வழியாகவும் பரிணமிக்கக் கூடும். இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். இந்திய சூழமைவில் இஸ்லாம் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றது காலந்தோறும் இதுபோன்ற அமிலத்தேர்வில் தங்களை உட்படுத்திக்கொண்டு தங்களது புனிதத்தை நிரூபிக்கும் நெருக்கடியிலிருந்து அவர்களை விடுவிக்கும் மனிதகுல விடுதைப் பணியை இடதுசாரி , முற்போக்கு சக்திகள் செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளது. ஒரு ஒடுக்குமுறையில் அரசின் வன்முறைக் கருவியான போலீஸ் என்ன செய்யும் என்பதையும், அந்த ஒடுக்குமுறை ஏற்படுத்துகின்ற மன அ திர்வுகள், நியாயக்கோர ல்கள் என அனைத்தையு ம் படம் பிடித்துள்ளது இப்புத்தகம். அனைவரும் தவறாது படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.2019 ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக போலீஸ் ஒடுக்குமுறை, 2020 ஷாகீன் பாக் போராட்டம் இவற்றின் அன்றாட
நிகழ்வுகளை ஒரு திரைக்கதை போல விவரணை செய்துள்ளார் நேஹால் அகமது. அவர் கூட இந்த அரசமைப்பின் உள்ளுறையாக இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்பில் புகைந்து தன்னையும் இத்தேசத்தில் ஒரு அந்நியராக உணரத் தலைப்படுகிறார். அந்தப் புள்ளி மனதை நெருடுகின்றது. பிற்போக்குச் சக்திகள் வெற்றிபெறும்புள்ளியும் இதுதான்.
Be the first to rate this book.