முஸ்லிம் ஆட்சி என்றதும் நமக்கு முகலாயர்களோ சுல்தான்களோதான் நினைவுக்கு வருவார்கள். உண்மையில் இந்தியாவில் உருவான முதல் முஸ்லிம் மன்னராட்சி ஏர்வாடி ஞானி சுல்தான் சையித் இப்ராஹீம் ஷஹீத் அவர்களுடையதாகத்தான் இருக்க வேண்டும்.
ஆனால் அவரைப் பற்றி நம்மிடம் அதிக வரலாற்றுத் தரவுகள் இல்லை. இஸ்லாமியப் பிரசாரகர்களில் முன்னோடி. சேதுநாட்டுக்கு வந்த முதல் முஸ்லிம் பிரசாரகர். நபிபெருமானாரின் உத்தரவின் பேரில் இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக பாண்டிய நாட்டுக்கு வந்து, கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆட்சி செய்து இறுதியில் தன் உயிரையும் தன் குடும்பத்தினரின் உயிரையும் இழந்த ஏர்வாடி மகானின் வாழ்க்கை வரலாறு இது.
இந்திய சூஃபிகள் வரிசையில் நாகூர் ரூமியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்பு இது. புதையுண்டு கிடக்கும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் அரிய முயற்சியும் கூட.
Be the first to rate this book.