தான் யார் என்னும் கேள்வியில் களைத்துப் போயிருக்கும் சிலுக்கு, தனக்கிருக்கும் பிரச்சனைகள் குறித்துப் பேச மறுக்கும் வரதன், இந்த இரவைக் கடக்க முடியாமல் சிக்கித் தவிக்கும் பரோட்டா பிரியன் என இத்தொகுப்பில் இருக்கும் யாரொருவருக்கும் ஏதோவொரு பிரச்சனை. இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வென எதுவுமே இன்றி அவர்தம் இயல்பிலேயே அவர்களின் வாழ்வில் சில அத்தியாயங்களை நாம் படித்துவிட்டு கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் கதை மாந்தர்களைக் கடந்து ஊர்ந்து செல்லும் எறும்பைப் போல் பக்கங்களைக் கடக்க வேண்டியதிருக்கிறது. எந்தக் கதையும் பத்து நிமிடத்துக்கு மேல் நம்மை வாசிக்க வைத்து சோதிப்பவையல்ல. அதே சமயம் அந்த நிர்வாண மனிதர்களின் அழுக்குகளை நம் முன் காட்சிப்படுத்த அவை தவறுவதில்லை. ஆண்களுக்கு ஏன் மார்புகள் என்பது கேள்வியாய் ஒரு கதையில் தொக்கி நிற்கிறது. ஃபேன்டசி பயணம் எடுக்கும் பதினொன்றாம் நாள் கதைகூட இறுதியில் மனப்பிறழ்வை நோக்கி நம்மை இழுத்துச் செல்கிறது.
- கார்த்தி
Be the first to rate this book.