எரடோஸ்தனிஸ் பன்முகத்தன்மை கொண்டவர்.அதனால் , பஞ்சாவதானி (Pentathalus) என்று பாராட்டப்பட்டார். எரடோஸ்தனிஸ் தத்துவத்தில் இரண்டாவது பிளேட்டோ என்றும், வானவியல் கணிப்பில் தாலஸுக்குப் பிறகு வந்த மிகச் சிறந்த வித்தகர் என்றும் பேசப்பட்டார்.இவருக்கு பீட்டா (Beta) என்ற பட்டப் பெயரும் உண்டு. புவியியல் (Geography) என்ற வார்த்தையை உருவாக்கியவர் எரடோஸ்தனிஸ்தான். உலகில் முதன் முதலில் பூமியின்விட்டத்தையும், சுற்றளவைவும் சரியாக அளந்தவர் எரடோஸ்தனிஸ்தான். அது மட்டுமல்ல பூமியின் அட்சரேகை,தீர்க்கரேகை என்ற முறையைக் கண்டுபிடித்தவரும் எரடோஸ்தனிஸ்தான். புவியியலின் ஒழுங்குமுறை விதிகளை நிர்ணயித்தவரும் இவரே..! ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அலெக்சாண்டிரியா நூலகத்தின்நிர்வாக இயக்குநராக இருந்தவர்.
Be the first to rate this book.