குற்ற உலகில் சவாலாக அமைந்த குற்றங்களின் தன்மை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றைத் திரட்டி ஆராய்ந்து சுவைபட படைத்திருக்கிறார் பிரபாகர் அவர்கள். ‘எப்படி? இப்படி!’ அற்புத படைப்பு. அதில் பிரதானமாக தடயங்கள் எவ்வாறு புலனாய்விற்கு உதவின என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் பொழுதுபோக்கிறகாக வாசிக்கும் லட்சிய வாசகர்களுக்கும் புலனாய்விலும் வழக்குரைப்பதிலும் தேர்ந்த லட்சண நிபுணர்களுக்கும் ஏற்கும் வகையில் படைத்திருக்கும் பிரபாகர் பாராட்டுக்குரியவர். காவல்துறையின் மிக முக்கிய பணி குற்றப் புலனாய்வு . அதன் நுணுக்கங்களை எளிதாகப் புரியும் வகையில் சொல்லியிருக்கிறார் பிரபாகர். இதைப் படிக்கும் வாசகர்களுக்கு காவல் துறை மீது நம்பிக்கையும் மதிப்பும் வரும் என்பதில் சந்தேகமில்லை. காவல் துறை சார்பாக பட்டுக்கோட்டை பிரபாகருக்கு இதயமார்ந்த நன்றி.
- நடராஜ் ஐ.பி.ஸ். (மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் )
Be the first to rate this book.