ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்புணவு உண்டு.
அப்படியான ஊர்களைத், தேடிப் பயணித்து, அங்கு
மட்டுமே கிடைக்கக்கூடிய சிறப்பு உணவுகளை
இந்நூல் அடையாளப்படுத்துகிறது. அந்த உணவின்
வரலாறு, உணவகம் அல்லது இனிப்பகம், அதன்
பாரம்பரியம் ஆகியவற்றையும் இந்நூல் அலசுகிறது.
இதில் தரப்பட்டுள்ள பல உணவுகள் அந்த ஊரில்
ஓரிரு இனிப்பகங்கள் அல்லது உணவகங்களில்
மட்டுமே கிடைக்கக்கூடியவை. அவற்றைச்
செய்முறை அறிந்து வீடுகளில் செய்வதும்
சுலபமல்ல. கைமணம், தட்பவெப்பம், தண்ணீரின்
தன்மை என அதற்குப் பல காரணங்கள் உண்டு.
வீடுகளில் செய்ய முடியாது என்பதால்
உணவகங்கள், இனிப்பகங்களின் தொடர்பு எண்கள்
இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பல இனிப்பகங்கள்
பணம் அனுப்பினால் விரைவு அஞ்சலில்
அனுப்பித்தரும் வசதியை வைத்துள்ளன.
வரலாறு, செய்முறை, சேர்மானம், சுவை
என அந்த உணவுகள் பற்றிய முழுத்
தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.