உலகச் சீர்குலைவு ஒன்று புதிதாகத் தலைதூக்குகிறது. இதில் இயற்கை வளங்களுக்காக நடத்தப்படும் போர்கள் அவசரமாக முக்கியத்துவம் கொள்கின்றன. இந்த வளங்களைக் கைப்பற்றுவதில் உலகின் சக்திவாய்ந்த அரசுகள் மேற்கொள்ளும் தன்னிச்சையான இராணுவ பலத்துடன் கூடிய அயல்நாட்டுக் கொள்கைகள் எண்ணெயின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. உலகின் தென்பகுதியில் உள்ள எண்ணெய் வளமிக்க நாடுகள் தங்களின் இறையாண்மை, பண்பாட்டு ஒற்றுமை, மனித உரிமைகள், அழிவின் விளிம்பிலிருக்கும் சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றைக் காப்பாற்ற இந்தப் போரில் கட்டாயப்படுத்தி இழுக்கப்படுகின்றன.
Be the first to rate this book.