பாலியல் அத்துமீறல்கள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமன்றி, ஆண் குழந்தைகளுக்கும் நேரிடுகிறது என்பதுதான் உண்மை. பூங்கொடி அது குறித்தும் பேசுகிறார். நூறாண்டுகளுக்கு முன் புதுமைப்பித்தன் தொட்ட இடம் இது. பாலியல் அத்துமீறல் குறித்து எழுதுவது கத்தி மீது நடப்பது போன்று. கொஞ்சம் இடறினாலும் ஆபாசம் என்று சொல்லி விட வாய்ப்புண்டு. ஆனால், பூங்கொடி இதை இலகுவாகக் கையாண்டு இயல்பாக எழுதியிருக்கிறார். அதற்குக் காரணம் அவர் குழந்தைகளோடு பழகி, அவர்களின் இயல்பாகவே அதை வெளிப்படுத்தியதே.
Be the first to rate this book.