2010-ல் தமிழக அரசு இவருடைய எழுத்துப் பணியைப் பாராட்டி கலைமாமணி பட்டத்தை அளித்து கௌரவித்தது. க்ரைம் நாவல்கள் மட்டும் அல்ல, சமுதாய அவலங்களைச் சாடும் சமூக நாவல்களையும் 1500 என்கிற எண்ணிக்கையையும் தாண்டி இன்னமும் எழுதிக் கொண்டிருப்பவர்.
41 ஆண்டுகளில் நான்கு தலைமுறை வாசகர்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர். தமிழில் வெளிவந்த, இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கிற அனைத்து மாத, வார, நாளிதழ்களில் 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர்.
எழுத்துலகில் அவர்க்கு நேர்ந்த அவமானங்களையும், கிடைத்த வெகுமானங்களையும் தனக்கே உரித்தான விறுவிறுப்பான பரபரப்பான நடையில் 500க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் கொட்டியுள்ளார்.
நீங்கள் எந்த துறையில் பணிபுரிவராய் இருந்தாலும் சரி, இந்தப் புத்தகத்தைப் படியுங்கள், ஒரு சாதனையாளராக மாற 100% உத்திரவாதம்.
Be the first to rate this book.