சமகால கொங்கு வாழ்வில் புரையோடிப்போன கலாச்சார வெளி குறித்தும் தத்தம் மனிதர்களினூடே நிகழும் பாலியல் மற்றும் மனப்போராட்டம் குறித்தும் பதிவு செய்கின்றன வா.மு.கோமுவின் சிறுகதைகள். பலதரப்பட்ட சமுதாயத்தினரை தன் கதை மாந்தர்களாக கொண்டிருக்கும் இவரது சிறுக்கதைகள் முடிவுற்று தொடர்ந்து பயணிக்கவல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்துதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழ்க்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
Be the first to rate this book.