இன்றைய நவ நாகரிக உலகில் தங்களைப் பளிச்செனக் காட்டிக்கொள்ள விரும்பாத பெண்கள் இல்லை. ஒவ்வொருவரின் அறிவு, மதிப்பு, வசதியை அழகு மேலும் உயர்த்திக் காட்டுகிறது. பிறருடைய ஈர்ப்பை மட்டும் அல்லாது தன்னம்பிக்கை, பெருமை, தெளிவு என அழகு நமக்குக் கொடுக்கும் அபரிமிதமான ஆற்றல்கள் அதிகம். மேக்கப் என்பது சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள், வசதிபடைத்த மேல்தட்டுப் பெண்களுக்கு மட்டுமேயானது என்கிற நிலை இப்போது மாறிவிட்டது.
நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் தங்களை அழகாக மாற்றிக்கொள்ள மேக்கப் கலையை நாடத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் பெருநகரங்களில் அழகு நிலையங்கள் பல்கிப் பெருகி உள்ளன. இமை, விழி, புருவம், நெற்றி, உதடு, கன்னம், கழுத்து, காது, மூக்கு, முகம், முதுகு, மேனி, விரல்கள், நகங்கள், சருமம், கூந்தல் என அத்தனை உறுப்புகளும் அழகு பெற நூலாசிரியர் வீணா குமாரவேல் சொல்லும் வழிமுறைகள் அனைவரும் பின்பற்றத்தக்கவை.
மேலும், நம் நிறத்துக்கு ஏற்றபடி உடை அலங்காரம், அணிகலன்கள், கையில் எடுத்துச் செல்லும் பை என அனைத்தையும் மாற்றிக்கொள்ளும் வழிமுறைகளையும் இங்கே கற்றுத் தருகிறார் வீணா குமாரவேல். அழகுக்கு அணி சேர்க்கும் எக்கச்சக்கக் குறிப்புகள் அடங்கிய இந்தப் புத்தகம், உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் இருக்க வேண்டிய ஒன்று.
Be the first to rate this book.