உடைமைகள் அனைத்தையும் கடற்சீற்றத்தில் இழந்து உயிர்தப்பி கரையில் அமர்ந்திருக்கும் ஒரு வணிகனைப் போல கதைகளுக்காக நான் காத்திருக்கிறேன். அலைகள் கொண்டு வந்து கரைசேர்க்கும் உடைமைகளின் மிச்சங்கள் போல இக்கதைகள் என்னிடம் வந்து சேர்கின்றன.
பயன்படுத்த முடியாதவை விற்க முடியாதவை. முன்பும் இவை என்னுடன் இருந்தன. நான் இவற்றுக்கு ஒரு பொருளை கற்பித்து வைத்திருந்தேன். ஆனால் ஒரு சீற்றத்தில் சிக்கித் தப்பியபின் இப்பொருட்கள் முழுமையாக வேறுவகையாக பொருள்படுகின்றன. முன்பிருந்தது போல அல்லாமல் கற்றுக் கொண்டவற்றின்
பெற்றவற்றின் இழந்தவற்றின் சாட்சியங்களாக மாறிவிட்டிருக்கின்றன. திரும்பி வந்திருக்கும் இக்கதைகள் ஒவ்வொன்றும் எனக்கு கற்பித்தன.
என்னை எனக்குக் காட்டித் தந்தன. இக்கதைகளுக்கென இவ்வருடத்தில் வந்த வாசக எதிர்வினைகள் மற்றும் விமர்சனங்களைப் பார்க்கும் போது இக்கதைகள் பலருடன் உரையாடி இருப்பதை உணர முடிகிறது. அத்தகையதொரு உரையாடலின் முழுவடிவமாகவே இத்தொகுப்பினை நான் காண்கிறேன்.
Be the first to rate this book.