வளர்ப்புப்பிராணிகள் உள்ளிட்ட தாவர இனங்களோடு மனிதக்குடியிருப்புகள் தன் புறவுலக அன்றாடத்தில் சலனங்களாகும்போது உற்றுநோக்கும் கவிதையின் கண்கள் விழித்துக்கொள்கின்றன. காட்சிகளுக்கும் புலன்களுக்குமிடையே மனிதன் வாழ்நாள் குதூகலங்களையும் வியாகூலங்களையும் இவ்வாறே மனவரிசை படுத்திக்கொள்கிறான். பற்றுதல் ஒவ்வொன்றும் சலிப்பாகவும் வெறுமையாகவும் கழன்றுகொள்ளும்போது அழகியலும் அதற்கான செவ்வியலும் ஒரு மொழியில் கவிதைகளாக முழுமைபெறுகின்றன. அதற்குள்தான் கவிஞனும் நம்மிடமிருந்து வெளியேறிப் போய்விடுகிறான்.
- யவனிகா ஸ்ரீராம்
Be the first to rate this book.