"பேச்சின் வடிவங்கள், சில பழைய இலக்கண வடிவங்கள் என்று எதையும் விலக்காத ஓட்டம். மனவோட்டத்தின் வேகத்தைக் காட்டும் ஒலியின் கோவையாக வரும் தொடர்கள்... கருத்தும் மொழியும் கவித்துவமும் ஒன்றிய கவிதைகள் வந்து விழுந்திருக்கின்றன, அருவிபோல..."
- இ. அண்ணாமலை, வருகைதரு பேராசிரியர், சிகாகோ பல்கலைக்கழகம்
"பிரபாத்தின் கவிதைகள் மின்மினிப்பூச்சியின் ஒளிக் கீற்று; ஒரு கணம் அதன் ஒளிவீச்சு, மறுகணம் மறைந்துவிட்டு, மீண்டும் ஒளிவீச்சு, கண்ணையும் காதையும் தொட்டு விளையாடுவதுபோல்; மறைபொருள், சொல்சிக்கனம், முரண்நகை, அசாதாரண, ஆர்வமூட்டும் பார்வை, பொங்கும் மொழி இவற்றுடன் மின்மினியின் ஒளியைப் பதிவுசெய்கிறார். உபநிஷத்துகளின் வரிகள், கம்பனின் படிமங்கள், ஜென் கூற்றுகளை ஒத்த, தமிழுக்கேயான தொடர்கள் இவர் கவிதைகளில் எதிரொலிக்கின்றன... பிரபாத், இக்காலச் சித்தர்..."
- டேவிட் ஷுல்மன், Tamil, A Biography ஆசிரியர்
"நினைவில் தங்கிய நேற்றைய மொழியில் இன்றைய வாழ்க்கை, அபூர்வமான அத்வைதக் கருத்துகள், தற்காலச் சிந்தனை எடுத்துக்கொள்ளும் பழைய இலக்கிய வடிவம், புராணக் கதைகள், சென்ற நூற்றாண்டின் இசைப் பாடல் மரபு—இவை எல்லாம் இங்கே பட்டுத் துணி பளபளக்கும் பாந்தத்தில் மின்னுகின்றன."
- தங்க ஜயராமன், 'காவிரி வெறும் நீரல்ல' ஆசிரியர்
"தொனி, பாடுபொருள் மற்றும் கட்டமைப்பில் நவீன தமிழ்க் கவிதை மரபின் இருவேறு முக்கிய காலகட்டங்களை—ஐம்பதுகள், எழுபதுகளை— நினைவூட்டும், அவற்றின் சிறப்பியல்புகளைப் பிரதிபலிக்கும் கவிதைகள்; இவை முன்வைக்கும் ஆதங்கங்கள், கேள்விகள் இன்றும் நமக்கு முக்கியமானவை."
- திலீப் குமார், ‘கடவு', ‘ரமாவும் உமாவும்' ஆசிரியர்
Be the first to rate this book.