எங்களுக்காகப் பரிதாபப்பட யாருமே இல்லையா, என்று உழைக்கும் மக்கள் தவித்து நின்ற போது, நான் இருக்கிறேன் என்று குரல் கொடுத்தார் எங்கெல்ஸ். பரிதாப்பட அல்ல, போராட. இந்த நூற்றாண்டின் மாபெரும் போராட்டம் அது. கரும்புச் சக்கைகளைப்போல் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த கால கட்டம் அது. ஒரு நாளைக்குப் பதினெட்டு மணி நேரங்கள் ஓய்வில்லாமல் இயந்திரம் போல் செயல்பட்டால்தான் கூலி. அதிலும் ஒரு நாள் கூலி ஒரு வேளை உணவுக்குகூட போதாது. தலைவிதி என்று அனைவரும் அவரவர்வழியில் சென்றுகொண்டிருந்த சமயம், எங்கெல்ஸ் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை மிகக் கவனமாக ஆராய ஆரம்பித்தார். போதுமான உழைப்பைச் செலுத்தியும் ஏன் இவர்களுக்கு இத்தனை குறைவான சம்பளம். இவர்களை வைத்து வேலை வாங்கும் முதலாளிகள் செழிப்பாக மினுமினுக்கும் போது இவர்கள் மட்டும் ஏன் இப்படி அவதிப்படுகிறார்கள். காரல் மார்க்ஸூடன் இணைத்து எங்கெல்ஸ் இதற்கான விடையைக் கண்டுபிடித்தபோது, தொழிலாளர்களின் தலைவிதி மாற்றி எழுதப்பட்டது. இவர்கள் எழுதிய புதிய விதியின் பெயர் கம்யூனிசம்.
- அ. குமரேசன்.
Be the first to rate this book.