துக்ளக் இதழில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில்.
ஒரு செருப்புக்கே இவ்வளவு யோசிக்கும் நீ உன் புருஷனைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டாயே?” என்பேன் அவந்திகாவிடம். அதற்கு, “இதையெல்லாம் கிண்டல், நகைச்சுவை என்று நினைத்துக்-கொண்டு பேசும் உங்களை எப்படி எல்லோரும் படிக்கிறார்கள்?” என்று எதிரடி கொடுப்பாள்.
துக்ளக்கில் நான் எழுதுவேன் என்று ஒரு மாதத்திற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு அடைந்த ஆச்சரியத்தையே அடைந்திருப்பேன். வாய்ப்பு அளித்த துக்ளக் ஆசிரியருக்கு நன்றி.
“வாராவாரம் எதை எழுதப் போகிறீர்கள்?” என்றார் நண்பர். “ஐ.நா. சபையில் போர்ச்சுகல் நாட்டு மந்திரி பேசவேண்டிய பேச்சை தன்னுடைய பேச்சாக நினைத்துக்கொண்டு பேசும் பேர்வழியெல்லாம் இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும்போது எழுதுவதற்கான விஷயத்துக்கா பஞ்சம்” என்று பதில் சொன்னேன்.
- சாரு நிவேதிதா
Be the first to rate this book.