தமிழில் இன்று கவிதைகள், அதிக எண்ணிக்கையில் எழுதப்படுகின்றன. ஆனால், அவை குறித்த விரிவான பேச்சுகள் இல்லாமல், கனமான மௌனம் நிலவுகிறது. பொதுவாகக் கவிதை பற்றிய விமர்சனங்கள் அருகிக் கொண்டிருக்கின்றன. கவிதைகள் குறித்து ந. முருகேசபாண்டியன் எழுதியுள்ள காத்திரமான கட்டுரைகள், கவிதையுலகில் நிலவுகிற மௌனத்தை உடைக்க முயலுகின்றன. இரண்டாயிரமாண்டுக் கவிதை மரபில் நவீன கவிதையின் இடத்தை இக்கட்டுரைகள் நுட்பமாகச் சுட்டுகின்றன; இளம் கவிஞர்களின் சாரத்தைத் திறந்து காட்டுகின்றன; கவிதையை முன்வைத்துப் பல்வேறு கருத்தியல்களைக் கண்டறிந்துள்ளன. கவிதையை ரசிப்பதற்குச் சிறந்த பங்களிப்பாகவும், கவிதை விமர்சனத்தில் கையேடாகவும் இந்நூல் விளங்குகிறது.
Be the first to rate this book.